நாட்டறம்பள்ளியில் இந்து முன்னணி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடந்த போது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

இந்து முன்னணி மாவட்ட பொதுக்குழு கூட்டம்

பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது ஏராளமானோர் கலந்து கொண்டனர்

ஜோலார்பேட்டை:

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இந்து முன்னணி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பிரபு தலைமை தாங்கினார். இந்தக் கூட்டத்தில் கோட்ட பொறு ப்பாளர் தீனதயாளன், ரவி மற்றும் மாவட்ட செயலா ளர்கள் கலந்துகொண்டனர்.

சிறப்பு அழைப்பாளராக நாட்டறம்பள்ளி பேரூராட்சி 14 வது வார்டு கவுன்சிலர் இல.குருசேவ், நந்தனம் பொறியியல் கல்லூரி தாளாளர் மோகன கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பொதுக்குழு கூட்டத்தில் நந்திபெண்டா நந்திராயன் கோவில் சிலைகள் சேதமடைந்துள்ளது.

அதனை சீர் செய்ய வேண்டும். ராஜராஜ சோழன் பிறந்த நாளை அரசே கொண்டாட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டறம்பள்ளி பகுதியில் கள்ள சாராயம் காய்ச்சி விற்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

நாட்டறம்பள்ளி பகுதிகளில் உள்ள கோவில் குளம் ஆக்கிரமிப்பு செய்ய ப்பட்டுள்ளதை உடனடியாக அகற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

இதில் இந்து முன்னணி கட்சி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT