உள்ளூர் செய்திகள்

இலவச சைக்கிள் வழங்கும் விழா

ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்உதயேந்திரம் பேரூராட்சி பள்ளியில் நடந்தது

ஆலங்காயம்:

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த உதயேந்திரம் பேரூராட்சியில் உள்ள புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் விழா தாளாளர் மாறன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பேரூராட்சி தலைவர் ஆ.பூசாராணி, முன்னாள் பேரூராட்சி தலைவர் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஆ.செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கி பேசினர்.

இதில் பள்ளியின் தலைமை ஆசிரியை சுகந்தி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அந்தோணிதாஸ் நன்றி கூறினார்.

SCROLL FOR NEXT