ஆம்பூர்:
பகுதியை வாணியம்பா டியை அடுத்த ஆலங்காயம் சேர்ந்தவர் ரவி மனைவி வள்ளி (வயது 45). இவர் ஆம் பூரில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் வேலை செய்து வந்தார். நேற்று மாலை வேலை முடித்துவிட்டு ஆம்பூரை அடுத்த செங்கிலிகுப் பம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வள்ளி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.