உள்ளூர் செய்திகள்

லாரி மோதி முன்னாள் ராணுவ வீரர் பலி

பால் வாங்குவதற்கு சென்றபோது விபரீதம் போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டையை அடுத்த மண்டலவாடி நாயுடு வட்டம் ஏரிமேடு பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 65), முன்னாள் ராணுவ வீரர்.

இவர் நேற்று காலை பைக்கில் வீட்டில் இருந்து பொன் னேரி கூட்ரோடு சாலையில் பால் வாங்குவதற்கு சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார்.

பொன்னேரி கூட்ரோடு சாலையில் வாணியம்பாடி பகுதியில் இருந்து திருப்பத்தூர் நோக்கி எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது.

இதில் வேணுகோபால் படு காயம் அடைந்தார். அவரை அங்கிருந்த பொதுமக்கள் சிகிச் சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது சம்பந்தமாக அவரது மனைவி ராணி கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காதர்கான் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.