உள்ளூர் செய்திகள்

பாலாற்றில் உயிரிழந்த மீன்கள்

மக்கள் குற்றஞ்சாட்டுஅதிகாரிகள் ஆய்வு

ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பாலாற்றின் கரையோரம் ஆயிரக்கணக்கான மீன்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதுகுறித்து பொதுமக்கள், சுற்றுச்சூழல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் விரைந்து வந்த அதிகாரிகள் இறந்த மீன்களை பாலாற்றில் இருந்து அகற்றினர். பிறகு அந்த நீரை மாதிரிக்காக சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பினர். பாலாற்றில் தோல் கழிவுநீர் கலப்பதால் மீன்கள் இறந்தாக அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

SCROLL FOR NEXT