உள்ளூர் செய்திகள்

ரெயிலில் கடத்த முயன்ற ரேசன் அரிசி பறிமுதல்

500 கிலோ சிக்கியது உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவில் ஒப்படைத்தனர்

ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன்பட்டி ரெயில் நிலையத்தில் வெளிமாநிலங்களுக்கு ரெயில் மூலம் ரேசன் அரிசி கடத்த இருப்பதாக மாவட்ட உணவு பொருள் கடத்தல் பிரிவு போலீசாருக்கும், ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கும் தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் சோம நாயக்கன்பட்டி ரெயில் நிலையம் அருகே தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ரெயில் நிலையம் அருகே உள்ள முள் புதரில் ேரசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

இதனை அடுத்து 500 கிலோ ரேசன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மேலும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசியை திருப்பத்தூர் மாவட்ட உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.