உள்ளூர் செய்திகள்

ரெயில் மோதி ஆட்டோ டிரைவர், மூதாட்டி பலி

தண்டவாளத்தை கடக்க முயன்ற போது பரிதாபம் போலீசார் விசாரணை

ஜோலார்பேட்டை:

குடியாத்தம் அடுத்த கண்ணித்தோப்பு பாண்டியன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மேகநாதன் இவரது மகன் சண்முகம் (வயது 34) இவருக்கு திருமணமாகி அஞ்சலி என்கின்ற மனைவியும் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவர் ஆட்டோ ஓட்டி வந்தார்.

இன்னிலையில் நேற்று ஆட்டோ டிரைவர் சண்முகம் குடியாத்தம் வளத்தூர் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக வந்த ரெயிலில் அடிபட்டு உடல் சிதறி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

ஆம்பூர் அடுத்த காமராஜர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மனைவி பவுனம்மாள் (வயது 62) இவர் நேற்று பச்சகுப்பம் ஆம்பூர் ரெயில் நிலையங்களுக்கிடையே தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

அப்போது காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கிச் சென்ற ஒரு ரெயிலில்அடிபட்டு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து ஜோ லார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி சப் இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.