மாற்றுக் கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தவர்கள். 
உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க.வில் இணைந்த மாற்று கட்சியினர்

100-க்கும் மேற்பட்டோர் சேர்ந்தனர்நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்

திருப்பத்தூர்:

பாரதிய ஜனதா கட்சி புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சி மற்றும் மாற்றுக் கட்சியிலிருந்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தவர்களை கட்சியில் சேர்க்கும் நிகழ்ச்சி ஏலகிரி மலையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பொதுச்செயலாளர் கவியரசு தலைமை வகித்தார். 100-க்கும் மேற்பட்டோர் மாற்றுக் கட்சியில் இருந்து விலகி மாவட்ட தலைவர் சி.வாசுதேவன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தனர்.

மாவட்ட பொது செயலாளர் தண்டாயுதபாணி, ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய பொதுச் செயலாளர் திலகராஜ் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT