உள்ளூர் செய்திகள்

குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண் சாவு

சிகிச்சை பலனின்றி பரிதாபம் போலீசார் விசாரணை

ஆம்பூர்:

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஏ கஸ்பா பகுதியை சேர்ந்தவர் மகேஷ் குமார். இவரது மனைவி ஜமுனா. தம்பதிக்கு யாஷிதா, யாஷிகா என்ற இரண்டு மகன்கள் இருந்தனர்.

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜமுனா ஆம்பூர் அடுத்த பெரிய குப்பத்தில் உள்ள தனது தாய் வீட்டில் கடந்த 3 ஆண்டுகளாக வசித்து வந்தார்.

தாய் வீட்டிலும் ஜமுனாவுக்கு சில பிரச்சனைகள் ஏற்பட்டதால் கணவனும் பிரிந்து விட்டார் தாய் வீட்டிலும் நிம்மதி இல்லை என எண்ணிய ஜமுனா நேற்று முன்தினம் தனது 2 குழந்தைகளுக்கு குளிர்பானத்தில் கலந்து விஷம் கொடுத்து விட்டு தானும் குடித்தார்.

மயங்கிய நிலையில் இருந்த ஜமுனா மற்றும் அவரது குழந்தைகளை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர் அங்கு குழந்தைகள் சிகிச்சை பலனின்றி இறந்தது. ஜமுனாவை மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை ஜமுனா பரிதாபமாக இறந்தார்.