கரியமாணிக்க பெருமாள் கோவிலில் தேரோட்டம் நடைபெற்ற போது எடுத்தபடம். 
உள்ளூர் செய்திகள்

டவுன் கரியமாணிக்க பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம்- திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

டவுன் கரியமாணிக்க பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா தேரோட்டம்- இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

மாலை மலர்

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் உள்ள பழமையான வைணவத் தலங்களில் நெல்லை டவுனில் அமைந்துள்ள கரிய மாணிக்கப் பெருமாள் கோவிலும் ஒன்று.

இந்த கோவிலில்  பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த 28--ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.  

இந்த திருவிழாவின் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் சுவாமிக்கு சிறப்பு யாகசாலை பூஜைகளும், மாலை வேளையில் பல்வேறு வாகனங்களில் வீதி உலாவும் நடைபெற்று வருகிறது.

திருவிழாவின் 10--ம் நாளான இன்று சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்காக கோவில் நடை அதிகாலையில் திறக்கப்பட்டு சிறப்பு யாகசாலை பூஜைகளும், அதனை தொடர்ந்து கரியமாணிக்கப் பெருமாள்- ஸ்ரீதேவி பூதேவி தாயாருடன் சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார்.

அதனைத் தொடர்ந்து தேரில் எழுந்தருளிய கரிய மாணிக்கப் பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடை பெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத் தனர்.

தேர் வீதி உலா வரும்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்வாரியம் சார்பில் சாலையின் குறுக்காக சென்ற மின்கம்பிகள் அப்புறப்படுத்தப்பட்டது.