அதிகாரிகள் பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

நெல்லையில் கட்டுக்கட்டாக சிக்கிய பிளாஸ்டிக் பைகள்

நெல்லை மாநகராட்சியில் பிளாஸ்டிக் பைகளை ஒழிப்பதற்கு மாநகராட்சி அதிகாரிகள் இன்று மேலப்பாளையம் மண்டலத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள கடைகளில் கட்டுக்கட்டாக பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

நெல்லை:

நெல்லை மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பைகள் உபயோகத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மாநகராட்சி அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். அதிக மாக பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்தவர்களுக்கு அபராதம்  விதிக்கப்பட்டு, வழக்குப்பதிவும் செய்யப்பட் டுள்ளது.

இதைத்தொடர்ந்து நெல்லை மாநகர பகுதியில் பிளாஸ்டிக் பைகள் உபயோகம் வெகுவாக குறைந்தது.

இந்த நிலையில் தற்போது மீண்டும் மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பைகள் அதிக அளவில் நடமாடுவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன.

அதன் பேரில் மாநகராட்சி கமிஷனர் விஷ்ணு சந்திரன் அதிரடி சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க அதிகாரி களுக்கு உத்தரவிட்டார்.

இன்று மேலப்பாளையம் மண்டல சுகாதார அதிகாரி கள் நடராஜன் மற்றும் ஊழியர்கள் மேலப்பாளையம் பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது சில கடைகளில் ஏராளமாக பிளாஸ்டிக் பைகளை பதுக்கி வைத்து பொதுமக்களுக்கு சப்ளை செய்வது கண்டுபிடிக்கப் பட்டது.

அவை அனைத்தை யும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  தொடர்ந்து பல்வேறு கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இன்று காலையில் நடந்த சோதனையில் மட்டும் 5 கிலோவுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து மாநகராட்சி யின் பல்வேறு பகுதிகளிலும் இதுபோல் பிளாஸ்டிக் ஒழிப்பு சோதனை நடத்தவும் அதிகாரிகள் முடிவு செய்துள் ளனர்.