களக்காடு:
களக்காடு வனப்பகுதியில் வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி கடந்த 27-ந்தேதி தொடங்கியது.
இதையொட்டி திருக் குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கடந்த 27-ந்தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.
இதனிடையே வன விலங்குகள் கணக்கெடுக்கும் பணி முடிவடைவதை முன்னிட்டு, வருகிற 5-ந்தேதி (சனிக்கிழமை) முதல் திருக்குறுங்குடி திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்படும் என்றும், 5-ந்தேதி முதல் பக்தர்கள் திருமலைநம்பி கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்றும் களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஸ்வரன் அறிவித்துள்ளார்.
இதுபோல் திருக்குறுங்குடி வனப் பகுதிக்கு சுற்றுலா செல்லவும் அனுமதி வழங்கப்படுகிறது.