நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.
நேற்று மாவட்டம் முழுவதும் 336 பேருக்கு தொற்று உறுதியானது. இந்நிலையில் இன்று புதிதாக 147 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மாநகராட்சி பகுதியில் 43 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். புறநகர் மாவட்டத்தை தொடர்ந்து மாநகராட்சி பகுதியிலும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.
நேற்று 336 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 527 குணமடைந்து சென்றுள்ளனர். தற்போது மாவட்டம் முழுவதும் அரசு மருத்துவமனை, வீடுகளில் 3,707 சிகிச்சையில் உள்ளனர்.
இதுவரை தொற்றில் இருந்து 57,309 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.