கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

தாய் கண்டித்ததால் வாலிபர் தற்கொலை

நெல்லை மேலப்பாளயைத்தில் தாய் கண்டித்ததால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை கொண்டார்.

மாலை மலர்

நெல்லை:

மேலப்பாளையத்தை அடுத்த கருங்குளத்தை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது31), கூலித்தொழிலாளி.

இவர் சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இவருக்கு குடிப்பழக்கமும் இருந்துள்ளது.

இதனை அவரது தாய் கண்டித்துள்ளார். இதனால் அவர் மானூரில் உள்ள அவரது தாய் மாமா வீட்டிற்கு சென்று விட்டார். இன்று காலை அங்கு சென்ற அவரது தாய், வீட்டிற்கு வருமாறு அழைத்து கண்டித்ததாக தெரிகிறது.

இதில் மனமுடைந்த அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த மானூர் போலீசார் அவரது உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின் றனர்.