நெல்லை:
நெல்லை அருகே உள்ள சுத்தமல்லியை சேர்ந்தவர் ஆசிக் மைதீன் (வயது 34). இவர் சேரன்மகாதேவியில் கோழிக்கறி கடை நடத்தி வருகிறார்.
இவரது கடையில் பாளை திம்மராஜபுரம் பகுதியை சேர்ந்த ஆதி நாராயணன் (19) என்பவர் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ஆதிநாராயணன் சமீபத்தில் அதன் அருகில் உள்ள மற்றொரு மட்டன் கடைக்கு வேலைக்கு சென்று விட்டார்.
அவர் தனது சம்பள பாக்கியை ஆசிக் மைதீனிடம் கேட்டு வந்துள்ளார். இது தொடர்பாக நேற்று அவர்க ளுக்குள் தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஆதிநாராயணன் கத்தியால் ஆசிக் மைதீனை குத்தினார். பலத்த காயம் அடைந்த அவரை, நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆதிநாராயணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.