கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

பாளையில் பாம்பு கடித்து பெண் சாவு

பாளை அருகே உள்ள பாளையஞ்செட்டிகுளத்தில் வயலுக்கு சென்ற பெண் பாம்பு கடித்து உயிரிழந்தார்.

மாலை மலர்

நெல்லை:

பாளை அருகே உள்ள பாளையஞ்செட்டிகுளம் நடு தெருவை சேர்ந்தவர் ஜான் எட்வர்ட். இவரது மனைவி பொன்னம்மாள் (வயது 60).இவர் நேற்று அவரது வயலுக்குச் சென்றார்.

அங்கு உள்ள வைக்கோல் படைப்பில் கால்நடைக்கு தேவையான வைக்கோலை எடுத்துக் கொண்டிருந்தார்.அப்போது அவரை பாம்பு ஒன்று கடித்துவிட்டது.

உடனே அவரை வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.இது தொடர்பாக பாளை தாலுகா போலீசார் வழக்குப்-பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.