கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

ராதாபுரம் அருகே தீக்குளித்து பெண் பலி

ராதாபுரம் அருகே தீக்குளித்து பெண் பலியானார்.

மாலை மலர்

நெல்லை :

ராதாபுரம் அருகே உள்ள சுப்பிரமணியபுரம் பகுதியை சேர்ந்தவர் வில்சன். இவரது மனைவி சரோஜா (வயது 44). கடந்த சில மாதங்களாக சரோஜா உடல்நிலை பாதிப்படைந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் வீட்டில் தனியாக இருந்த சரோஜா நேற்று தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த உறவினர்கள் தீயை அணைத்து, அவரை மீட்டு நாகர்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.