நெல்லை:
நெல்லை மணிமூர்த்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து ஒரு புகார் மனு இன்று அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:&
மணிமூர்த்தீஸ்வரம், செல்லப் பாண்டியன் நகர், பிள்ளைமார் தெரு உள்ளிட்ட 3&வது வார்டு பகுதிகளுக்கு தனியாக ரேஷன் கடை இல்லை. இவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க வேண்டுமெனில் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வாழவந்தான் அம்மன் கோவில் தெருவில் உள்ள ரேஷன் கடைக்கு செல்கின்றனர்.
இங்கு பொருட்கள் வாங்க கூட்டம் அதிகமாக காணப்படுவதால் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. எனவே செல்லப்பாண்டியன் நகரில் தனியாக ரேஷன் கடை அமைத்து தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தனர்.