நெல்லை:
நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய அளவில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் உட்பட்ட சுய உதவிக்குழு பெண்களுக்கு இடையேயான பாரம்பரிய உணவு மற்றும் ஊட்டச்சத்து விழிப்புணர்வு போட்டி நடைபெற்றது.
இதில் பங்கேற்ற 81 குழுக்களும் தாங்கள் சமைத்து எடுத்து வந்த பாரம்பரிய உணவுகளை மேஜைகளில் வைத்தனர். நாங்குநேரி யூனியன் சேர்மன் சவுமியா ஆரோக்கிய எட்வின், மாவட்ட துணை திட்ட இயக்குனர் சுமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிஷோர், கோமதி செல்வன் ஆகியோர் சுவைத்து சிறந்த அணியினருக்கு பரிசுகளை வழங்கினர்.
இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் ஆரோக்கிய எட்வின், வானமாமலை, சுடலை கண்ணு, மாவட்ட கவுன்சிலர் கிருஷ்ணவேணி ஆகியோர் கலந்து கொண்டனர்.