நெல்லை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந்தேதி நடைபெறு கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 28-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடை பெற்றது.
நெல்லை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சியில் 55 வார்டுகள், அம்பை, சிங்கை, களக்காடு ஆகிய 3 நகராட்சி களில் 69 வார்டுகள் மற்றும் 17 பேரூராட்சிகளில் 273 வார்டுகள் என மொத்தம் 397 இடங்களுக்கு தேர்தல் நடை பெறுகிறது.
வேட்பு மனு தாக்கல் நேற்று டன் முடிவடைந்த நிலையில் மாவட்டத்தில் மொத்தம் 2,226 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் தென்காசி, புளியங்குடி, கடைய நல்லூர், சங்கரன் கோவில், செங்கோட்டை, சுரண்டை ஆகிய 6 நகராட்சி களில் 180 பதவி களுக்கும், 17 பேரூராட்சிகளில் 260 பதவி களுக்கும் என மொத்தம் 440 பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்தப்படுகிறது.
இதில் 180 நகராட்சி பதவிகளுக்கு 1,057 பேரும், 260 பேரூராட்சி உறுப்பினர் பதவிகளுக்கு 1,181 பேரும் என மொத்தம் 2,238 பேர் வேட்புமனு தாக்கல் செய் துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத் தில் ஒரு மாநகராட்சியில் 60 வார்டுகளுக்கும், கோவில் பட்டி, காயல்பட்டினம், திருச்செந்தூர் ஆகிய 3 நகராட்சிகளில் 81 பதவி களுக்கும், 18 பேரூராட்சி களில் 273 பதவி களுக்கும் என மொத்தம் 414 பதவி களுக்கு நேரடி தேர்தல் நடத்தப்படுகிறது.
இதற்காக 2,276 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் நேரடி தேர்தல் நடைபெறும் 1,251 இடங்களுக்கு மொத்தம் 6,740 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இன்று வேட்புமனுக் களின் மீது பரிசீலனை நடை பெற்றது. காலை முதல் அந்தந்த பகுதிகளில் உள்ள அலுவலகங்களில் வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை தொடங்கியது.
அப்போது முறையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள், தேவையான ஆவணங்கள் இணைக்கப்படாத வேட்பு மனுக்கள் உள்ளிட் டவைகள் நிராகரிக் கப்பட்டன.
இதில் சுயேட்சைகள் அதிகம் அடங்குவர். சில வேட்பாளர்களின் மனுக் களில் உரிய ஆவணங் கள் இணைக்கப படாததால் அதற்கு மாலை வரை அனுமதி வழங்கினர்.
அதன் பின்னரும் ஆவணங்கள் வழங்கா விட்டால் அவர்களது வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இன்று மாலை வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை முடிந்து தகுதி இல்லாத வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்படும்.
வேட்பு மனுக் களை நாளை மறுநாள் (7-ந் தேதி) வரை வேட்பாளர்கள் வாபஸ் பெற்றுக் கொள்ளலாம்.
இதைத்தொடர்ந்து அன்று மாலையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளி யிடப்படும். 8-ந் தேதியில் இருந்து வேட் பாளர்கள் தங்கள் பிரசாரத்தை தீவிரப் படுத்துவார்கள். தொடர்ந்து 19-ந் தேதி நேரடி தேர்தல் நடத்தப்படுகிறது.