கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

பாளையில் பள்ளி ஆசிரியர் தற்கொலைக்கு முயற்சி

பாளையில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற பள்ளி ஆசிரியருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மாலை மலர்

நெல்லை:

பாளை ரஹ்மத் நகர் 60 அடி ரோடு பகுதியை சேர்ந்தவர் ஜான்சன் (வயது 56). 

இவர் பாலாமடையில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவர் இன்று காலை வீட்டில் விஷம் குடித்த நிலையில் மயங்கி விழுந்தார். 

இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

ஜான்சன் சிலருக்கு வட்டிக்கு பணம் வாங்கி கொடுத்ததாகவும், இதில் நஷ்டம் ஏற்பட்டதால் மனம் உடைந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. 

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.