கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

வி.கே.புரத்தில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

வி.கே.புரத்தில் மூதாட்டியிடம் நகை பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மாலை மலர்

நெல்லை:

வி.கே.புரம் அம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் வனராஜ். இவரது மனைவி கற்பகம் (வயது 60). இவர் நேற்று மாலை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். 

அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்மநபர் கற்பகம் கழுத்தில் கிடந்த 4 பவுன் தாலிச்செயினை பறித்து சென்றார். 

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கத்தி கூச்சலிட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் திரண்டு அவரை விரட்டி சென்றனர். எனினும் மர்மநபர் தப்பி சென்று விட்டார். கொள்ளை போன தாலிச்செயினின் மதிப்பு ரூ. 1.50 லட்சம் ஆகும். 

இது தொடர்பாக கற்பகம் வி.கே.புரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பிச்சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.