நெல்லை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிடுகிறது.
அந்த கட்சி சார்பில் போட்டியிடும் முதல் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை கட்சியின் நிறுவனத்தலைவர் சரத்குமார் நேற்று வெளியிட்டார்.
அதன்படி தூத்துக்குடி மாநகராட்சி வார்டு 10-ல் கலைச்செல்வி ஜெபமலர், 18-ல் சந்திரா, 60-ல் மந்திரமூர்த்தி ஆகியோரும் நெல்லை மாநகராட்சி வார்டு 1-ல் ஆறுமுகராஜ், 9-ல் அருணாச்சலம், 28-ல் அழகேசராஜன், 52-ல் சேதுராமலிங்கம், 54-ல் சண்முக ஆனந்தகுமார் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.