நெல்லை:
நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் விடுதிகளில் தங்கி இறுதி ஆண்டு பட்டப்படிப்பு பயிலும் மாணவ- மாணவிகளுக்கு ஆங்கில மொழி சரளமாக பேசும் பயிற்சி மற்றும் நேர்முக தேர்வுகளுக்கான திறன் வளர் பயிற்சி நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பயிற்சியை முடித்த 60 மாணவ- மாணவிகளை கலெக்டர் விஷ்ணு பாராட்டி சான்றிதழ் வழங்கினார். தொடர்ந்து அவர் பேசியதாவது:-
இளம் தலைமுறையினருக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறது.
அதன்படி நெல்லை மாவட்டத்தில் கல்லூரி படிப்பை முடித்து வேலை-வாய்ப்பை எதிர்நோக்கி உள்ள மாணவ- மாணவிகளுக்கு தயக்கம் இல்லாமல் ஆங்கிலம் பேசுவதற்கு, ஆங்கிலத்தில் பதில் கூறுவதற்கு மாவட்ட நிர்வாகம் மூலம் பயிற்சி ஏற்பாடு செய்-யப்பட்டது.
இந்த பயிற்சியை முடித்தவர்களுக்கு விரைவில் அவர்களுக்கான உயர்கல்வி, வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடுகள் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆதி-திராவிடர் நலத்துறை அலுவலர் தியாகராஜன், தேசிய தகவல் மைய மேலா-ளர் ஆறுமுக நயினார் மற்றும் அதிகாரிகள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.