உதவித்தொகை ஆணை வழங்கப்பட்ட போது எடுத்தபடம். 
உள்ளூர் செய்திகள்

கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் முதியவர்கள், விதவைகளுக்கு உதவித்தொகை ஆணை

கோபாலசமுத்திரம் பேரூராட்சியில் முதியவர்கள், விதவைகளுக்கு உதவித்தொகை ஆணை வழங்கப்பட்டது.

மாலை மலர்

நெல்லை:

கோபாலசமுத்திரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ஏராளமான முதியவர்கள் மற்றும் விதவைகள் உதவித்தொகை பெற விண்ணப்பித்திருந்தனர்.

அவர்களுக்கு பேரூராட்சி அலுவலகத்தில் உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு தலைவர் தமயந்தி தலைமை தாங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர்்் மாலதி முன்னிலை வகித்தார்.

இதில் துணைத் தலைவர் சுந்தர் ராஜன், மன்ற உறுப்பினர்கள் ஜெபக்குமார் , பிரபாரதி,  கிருஷ்ணவேணி, முருகம்மாள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை விண்ணப்பித்தவர்களுக்கு சமூக நலத்துறை மூலமாக  அனுமதி கடிதத்தை தலைவர் தமயந்தி வழங்கினார்.