ரங்கோலி வரைந்த மாணவிகள். 
உள்ளூர் செய்திகள்

மாவட்ட அறிவியல் மையத்தில் மாணவிகளுக்கு ரங்கோலி போட்டி

நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெற்று வரும் கண்காட்சியின் 2-வது நாளான இன்று மாணவிகளுக்கு ரங்கோலி போட்டி நடைபெற்றது.

மாலை மலர்

நெல்லை:

நெல்லை மாவட்ட அறிவியல் மையம் சார்பில் சுதந்திர இந்தியாவில் அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்தின் வளர்ச்சி என்ற தலைப்பில் கண்காட்சி நேற்று தொடங்கியது.

இதனை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணை வேந்தர் பிச்சுமணி தொடங்கி வைத்தார்.

இன்று 2-வது நாளாக மாணவிகளுக்கு ரங்கோலி போட்டி நடைபெற்றது. அரசு பள்ளிகள் உள்பட 10 பள்ளிகளை சேர்ந்த 10 குழுக்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு குழுவிலும் 2 மாணவி கள் இடம்பெற்று இருந்தனர்.

அவர்களுக்கு அறிவியல் தொழில்நுட்பம் குறித்து ரங்கோலி போட்டி நடந்தது. 9 முதல் பிளஸ்-2 வரையிலான மாணவிகள் பங்கேற்றனர்.

தொடர்ந்து அறிவியல் மைய வளாகத்தில் அறிவியல் தொழில்நுட்பம், மருத்துவம், போக்குவரத்து வசதி, பருவ நிலை மாற்றம், தடுப்பூசி உள்ளிட்டவைகள் குறித்து விழிப்புணர்வு கண்காட்சி இடம்பெற்றது.

அதுகுறித்த கேள்வி களுக்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தனர். தொடர்ந்து கண்காட்சி 28-ந்தேதி வரை நடக்கிறது. நாளை (24-ந்தேதி) அறிவியல் தேடல் நிகழ்ச்சி நடக்கிறது.

இதில் அறிவியல் மையத்தில் வைக்கப்பட்டுள்ள 300-க்கும் மேற்பட்ட கண்டு பிடிப்புகள் குறித்து கேட்கப்பட்டு அறிவியல் தேடல் நடைபெறும்.

இதில் பல்வேறு பகுதி களை சேர்ந்த 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவ- மாணவிகள் கலந்து கொள்கின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை அகில இந்திய அலுவலர் குமார், கல்வி அலுவலர் லெனின் ஆகியோர் செய்து வருகின்றனர்.