கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பிக் பாக்கெட் அடித்தவர் கைது

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பிக் பாக்கெட் அடித்தவர் போலீசார் கைது செய்தனர்.

நெல்லை:

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் தென்காசி செல்லும் நடை மேடையில்  விளாத்திகுளத்தை சேர்ந்த சோலைராஜ் (வயது 28). என்பவர் பஸ்சுக்காக காத்திருந்தார்.

அப்போது கடையம் பகுதியை சேர்ந்த ஜெயகிருஷ்ணன் (43), அங்கு வந்து சோலை ராஜ் பாக்கெட்டில் இருந்து பணம் திருடிவிட்டு தப்பிச் செல்ல முயன்றார்.  

இது தொடர்பாக அவர் மேலப்பாளையம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து ஜெயகிருஷ்ணனை கைது செய்தார். அவரிடமிருந்து ரூ.1000 பறிமுதல் செய்தார்.

SCROLL FOR NEXT