முகாமில் பங்கேற்றவர்களை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

அரியகுளத்தில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

சாரதா மகளிர் கல்லூரி சார்பில் அரியகுளத்தில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடந்தது.

நெல்லை:

 பாளை ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவணப் பிரியாஅம்பா, இயக்குனர் சந்திரசேகரன், கல்லூரி முதல்வர் கமலா, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப் பாளர் பேராசிரியர் ஆறுமுகம் ஆகியோர் வழிகாட்டுதலின் படி நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் உத்தம பாண்டியன் குளத்தில் ஒருவாரம் நடை பெற்றது.

அரியகுளம் பஞ்சாயத்து தலைவர் சுப்புலெட்சுமி மாரியப்பன் கடந்த 7-ந் தேதி முகாமை தொடங்கி வைத்தார். 2-ம் நாளில் அரசு சித்தமருத்துவகல்லூரி முதல்வர் திருத்தணி, டாக்டர் சுபாஷ்சந்திரன் தலைமையில் கபசுரக்குடிநீர் வழங்கும் முகாம் நடந்தது.

 3-ம் நாளில் கண் மருத்துமுகாம், பட்டிமன்றம் நடந்தது. 4-ம் நாள் கல்லூரி முதல்வர் கமலா தலைமையில் யோகா ஒரு மன ஒருமைப்பாடு சாதனம் என்னும் தலைப்பில் பேராசிரியர் செல்வகுமாரி சிறப்புரையாற்றினார்.

மேலும் நலம்தரும் சித்த மருத்துவம் என்ற தலைப்பில் டாக்டர் சுபாஷ்சந்திரன், மாநில முகமை அலுவலர் அசாதிகா அம்ரூத் மஹோத்சவ் மூலிகைகளின் பயன்களை எடுத்துரைத்தார்.

தொடர்ந்து பாளை தீயணைப்பு நிலைய அதிகாரி வீரராஜ் தலை மையில் பேரிடர் மேலாண்மை பயிற்சி பட்டறை நடந்தது.

5-ம் நாள் கல்லூரி துணைமுதல்வர் இந்திரா தலைமையில்   மகளிருக்கான ஊரக வளர்ச்சிதுறை மற்றும் சமூகநலத்துறை திட்டங்கள் குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கண்காணிப்பாளர் யமுனா சிறப்புரையாற்றினார்.

6-ம் நாள் சுயதொழில் பயிற்சி பட்டறை நடந்தது. தொடர்ந்து கல்லூரி தேசிய தரமதிப்பீட்டு சான்றிதழ் ஒருங்கிணைப்பாளர் ரேணுகா முன்னிலையில் உத்தமபாண்டியன்குளம் சமுதாய நலக்கூடம் முன்பாக மரக்கன்று நடப்பட்டது. 7-ம் நாள் மதிப்பீட்டுடன் முகாம் நிறைவு பெற்றது.