பதவியேற்பு விழாவில் திரண்ட உறவினர்கள். 
உள்ளூர் செய்திகள்

நெல்லை மாநகராட்சி அலுவலகத்தில் பதவியேற்பையொட்டி திரண்ட கவுன்சிலர்களின் உறவினர்கள்

நெல்லை மாநகராட்சியில் இன்று புதிய கவுன்சிலர்கள் பதவியேற்றனர். இதனால் அவர்களது உறவினர்கள், குடும்பத்தினர் அங்கு திரண்டனர்.

கவுன்சிலர்கள் பதவியேற்பு விழாவையொட்டி மாநகராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் என ஏராளமானோர் திரண்ட னர்.  

இதனால் பதவியேற்பு விழா நடைபெற்ற மாநகராட்சி மைய அலுவலகத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

இதையடுத்து மாநகராட்சி அலுவலக வளாகத்தில் சாமியானா பந்தல் அமைத்து இருக்கைகள் போடப்பட்டது.