கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

நெல்லை மாநகராட்சியில் அழுது கொண்டே பதவியேற்ற பெண் கவுன்சிலர்

நெல்லை மாநகராட்சியில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் இன்று பதவியேற்றனர். இதில் 35-வது வார்டு கவுன்சிலர், கொலை செய்யப்பட்ட தனது மகனை நினைத்து அழுது கொண்டே பதவியேற்றார்.

நெல்லை:

பாளை 35 வது வட்ட தி.மு.க. செயலாளர் அபேமணி கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்டார்.

அவரது தாயார் பேச்சியம்மாள் மாநகராட்சி 35-வது வார்டில் தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

மகனின் விருப்பத்தை நிறைவேற்றவே தேர்தலில் போட்டியிடுவதாக அவர் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று அவர் பதவியேற்ற போது உணர்ச்சிவசப்பட்டு அழுதார்.

மகன் விருப்பத்திற்காக தேர்தலில் போட்டியிட்ட தன்னை மக்கள் பெருவாரியாக வாக்களித்து வெற்றி பெறச்செய்தார்கள் என கூறிய அவரால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.