நெல்லை:
பாளை பெருமாள்புரத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்.சி.சி. மாணவ--மாணவிகளுக்கான 'சி' சான்றிதழ் தேர்வு இன்று நடைபெற்றது. இதற்கான செய்முறைத் தேர்வு இன்றும், எழுத்து தேர்வு நாளையும் நடைபெறுகிறது.
இன்று நடைபெற்ற செய்முறை தேர்வில் மாணவ-மாணவி களுக்கு பேட்டில் கிராப்ட், ரீடிங், ஆயுதங்களை பயன் படுத்துதல், கம்யூனிகேஷன் ஆகியவற்றில் உள்ள திறமையை வெளிப் படுத்த அறிவுறுத்தப்பட்டது. அதன் அடிப்படையில் அவர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டது.
இந்த தேர்வில் தமிழ்நாடு மூன்றாவது பட்டாலியன் மகளிர் என்.சி.சி. 5-வது பட்டாலியன் என்.சி.சி. ஒன்பதாவது பட்டாலியன் என்.சி.சி. ஆகியவற்றை சேர்ந்த மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.
கட்டளை அதிகாரி கர்னல் ரோகித் கோர், லெப்டினன்ட் கர்னல் ஆறுமுகம் ஆகியோர் இந்த தேர்வுக்கு தலைமை தாங்கினர். என்.சி.சி. அதிகாரிகள் மற்றும் நிரந்தர பயிற்றுநர்களின் மேற்பார்வையில் இந்த தேர்வு நடைபெற்றது.
தேர்வில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 390 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.