நெல்லை
தச்சநல்லூர் நல்மேய்ப்பர் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 51). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாளை நூற்றாண்டு மண்டபம் அருகே இட்லி கடை அமைத்துள்ளார்.
அங்கு ஏற்கனவே மணிகண்டன் (41) என்பவர் கடை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற் பட்டது. இதில் ஆத்திரமடைந்த மணிகண்டன் அவதூறாக பேசி தாக்கி உள்ளார்.
இதில் காய மடைந்த வெங்கடேசன் பாளை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணி கண்டனை கைது செய்தனர்.