நெல்லை:
நெல்லை சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் இன்று காலை அப்பகுதி பொதுமக்கள் குளிக்க சென்றனர். அப்போது அங்குள்ள பாறை இடுக்கில் சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் உடல் கிடந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த பொது மக்கள் சீவலப்பேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இறந்து கிடந்தவர் காவி நிற வேட்டி, நீல நிற சட்டை மற்றும் பச்சைத்துண்டு தலைப்பாகையுடன் காணப்பட்டார்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார்? எப்படி இறந்தார்? குளிக்கும் போது தவறி விழுந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.