கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

பாளையில் ஆயுள் தண்டனை கைதி சாவு

ஸ்ரீவைகுண்டம் தாலுகா நலங்குடி கிராமத்தை சேர்ந்த ஒருவர் பாளை சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருந்தார். நேற்று இரவு அவர் உடல்நலக்குறைவால் இறந்தார்.

நெல்லை:

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா நலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் செல்லையா (வயது86). 

இவர் முறப்பநாடு போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த இரட்டைக்கொலையில் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். 

ஆயுள் தண்டனை கைதியான இவர் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்றிரவு செல்லையா இறந்தார்.