மனித உரிமை ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் விசாரணை நடத்திய காட்சி. 
உள்ளூர் செய்திகள்

நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் மனித உரிமை ஆணைய நீதிபதி விசாரணை

நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் மனித உரிமை ஆணைய வழக்குகள் குறித்து நீதிபதி விசாரணை நடத்தினார். இதில் 4 மாவட்டங்களை சேர்ந்த 52 வழக்குகள் எடுத்துக்கொள்ளப்பட்டது.

மாலை மலர்

நெல்லை:

நெல்லை வண்ணார் பேட்டையில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் மாநில மனித உரிமை ஆணைய வழக்குகள் குறித்து மாதந்தோறும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கொரோனா ஊரடங்கையொட்டி இந்த விசாரணை நடத்தப்படாமல் இருந்தது. பின்னர் தொற்றின் வேகம் குறைந்து இயல்பு நிலை திரும்பியதால் கடந்த சில மாதங்களாக மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மனித உரிமைகள் ஆணைய நீதிபதி துரை ஜெயச்சந்திரன் இன்று நெல்லை அரசு விருந்தினர் மாளிகையில் விசாரணை மேற்கொண்டார்.

இதற்காக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான புகார்தாரர்கள் கலந்து கொண்டனர்.

இன்றைய விசாரணையில் 4 மாவட்டங்களை சேர்ந்த 52 மனித உரிமை மீறல் வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டு நீதிபதி துரை ஜெயச்சந்திரன் விசாரணை நடத்தினார்.