நெல்லை:
ராதாபுரம் அருகே உள்ள கும்பிகுளம் வடக்கூரை சேர்ந்தவர் மூக்காண்டி (வயது 46). இவரது மனைவி ஆழ்வார்.
இவர்கள் 2 பேரும் கூலி வேலை செய்து வருகின் றனர். சம்பவத் தன்று 2 பேரும் வீட்டின் கதவை பூட்டிவிட்டு வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டனர்.
மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்ததபோது பீரோவில் வைத்திருந்த 35 கிராம் எடை கொண்ட தங்க செயின் திருட்டு போயிருந்தது.
இதேபோல் அவரது வீட்டுக்கு அடுத்த வீட்டில் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். அவரது மனைவி சரஸ்வதி(67). இவர்கள் அந்த பகுதியில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரி கேண்டீனில் வேலை பார்த்து வருகின்றனர்.
இவர்களும் வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தனர். அப் போது பீரோவில் இருந்த 40 கிராம் தங்கநகை திருட்டு போயிருந்தது.
இந்த 2 திருட்டு சம்பவங்கள் தொடர்பாகவும் ராதாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.