உயர்கோபுர மின்விளக்கு தொடக்கவிழா நடந்தபோது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

உவரி, திசையன்விளையில் உயர்கோபுர மின்விளக்குகள் தொடக்க விழா- எம்.பி. இயக்கி வைத்தார்

உவரி, திசையன்விளையில் உயர்கோபுர மின்விளக்குகளை ஞானதிரவியம் எம்.பி. இயக்கி வைத்தார்.

திசையன்விளை:

நெல்லை தொகுதி எம்.பி. ஞான திரவியம் மேம்பாட்டு நிதி மூலம் உவரி சோதனை சாவடி சந்திப்பு, திசையன்விளை புறவழி சாலை 5 சாலை சந்திப்பு பகுதிகளில் உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 

அதன் தொடக்கவிழா அந்தந்த பகுதிகளில் நடந்தது. ஞான திரவியம் எம்.பி.தலைமை தாங்கி மின்விளக்குகளை இயக்கி வைத்தார். 

விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், மாவட்ட ம.தி.மு.க.செயலாளர் ரைமண்ட், குமாரபுரம் பஞ்சாயத்து தலைவர் அனிதா பிரின்ஸ், மாவட் தி.மு.க.தொண்டரணி துணை அமைப்பாளர் தனபால் உள்பட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.