பாளை வ.உ.சி. மைதானத்தில் அரங்குகள் அமைக்கும் பணி நடந்து வருவதை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

பாளை வ.உ.சி. மைதானத்தில் அரங்குகள் அமைக்கும் பணி தீவிரம்

பாளை வ.உ.சி. மைதானத்தில் வருகிற 17-ந்தேதி பொருநை புத்தக திருவிழா தொடங்க உள்ளது. இதனையொட்டி அங்கு அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மாலை மலர்

நெல்லை:

நெல்லை மாவட்டம் பல்வேறு தமிழ் இலக்கிய எழுத்தாளர்களையும், சாகித்ய அகாடமி விருதுகள் பெற்ற எழுத்தாளர்களையும் உருவாக்கி பெருமை பெற்றது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் பாளை வ.உ.சி. மைதானத்தில் 5-வது புத்தக திருவிழா வருகிற 17-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை நடத்தப்படுகிறது.

இதில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் 100-க்கும் மேற்பட்ட புத்தக பதிப்பாளர்கள் பங்கேற்கிறார்கள்.

இதில் கலை, இலக்கியம், சமூக நாவல்கள், வரலாற்று நாவல்கள், தன்னம்பிக்கை மற்றும் சுய முன்னேற்றத்திற்கான புத்த கங்கள், அரசு துறைகளில் வேலை வாய்ப் பிற்கான வழிகாட்டி புத்தகங்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான புத்தகங் கள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீத தள்ளுபடியுடன் சுற்றுச்சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு நெகிழி இல்லாத புத்தக திருவிழாவாகவும் நடத்தப்படுகிறது. 

மேலும் சுற்றுச்சூழல் மற்றும் பருவ நிலை மாற்றத்தினை எதிர்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் நெல்லை நீர்வளம்- தூய பொருநை நெல்லைக்கு பெருமை என்ற தலைப்பில் அரங்குகள் அமைக்கப்படுகிறது.

மேலும் நாட்டுப்புற கலைகளை உலகறிய செய்யும் வகையில் நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளும் இலக்கியம், வரலாறு மற்றும் பண்பாட்டை விளக்கும் வகையில் தலைசிறந்த பேச் சாளர்களின் சிறப்புரைகளும் நாள்தோறும் இடம்பெறுகிறது.

புத்தக திருவிழாவை காணவரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான உணவுகளை வழங்கிட உணவகங்களும் அமைக்கப்படுகிறது.

தமிழக அரசு பல்வேறு துறைகள் வழியாக செயல்படுத்தி வரும் முக்கிய திட்டங்களான மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, வருமுன்காப்போம் உள்ளிட்ட அரசின் திட்டங்கள், பயன்கள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.

பாளை வ.உ.சி. மைதானத்தில் புத்தக திருவிழாவுக்காக அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை நேற்று மாவட்ட வருவாய் அதிகாரி பெருமாள் ஆய்வு செய்தார்.