கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

கூடங்குளத்தில் வீட்டை உடைத்து நகை கொள்ளை

கூடங்குளம் அருகே உள்ள தில்லை நகரில் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் தங்க சங்கிலியை திருடி சென்றுவிட்டனர்.

மாலை மலர்

நெல்லை:

கூடங்குளம் அருகே உள்ள தில்லைநகர் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சுசீலா (வயது 35).

இவர்கள் குடும்பத்துடன் வீட்டை பூட்டிவிட்டு, வெளியூர் சென்றுவிட்டனர். நேற்று சுசீலா வீடு திரும்பியபோது, முன்பக்க கதவு உடைந்து இருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவை உடைத்து அதில் இருந்த 2 பவுன் தங்க சங்கிலியை திருடி சென்றது தெரியவந்தது.

இதன் மதிப்பு ரூ.60 ஆயிரம் ஆகும். இது குறித்து சுசீலா கூடங்குளம் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.