வாகை சந்திரசேகர் தலைமையில் நாட்டுப்புற கலைஞர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்ற காட்சி. 
உள்ளூர் செய்திகள்

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நாட்டுப்புற கலைஞர்கள் குறைதீர்க்கும் கூட்டம்-வாகை சந்திரசேகர் பங்கேற்பு

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நாட்டுப்புற கலைஞர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வாகை சந்திரசேகர் பங்கேற்றார்.

நெல்லை:

நாட்டுப்புற கலைஞர்கள் கலந்தாய்வு, குறைதீர்க்கும் கூட்டம், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் ஆகியவை நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்றது.

தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரிய தலைவர் வாகை சந்திரசேகர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய 5 மாவட் டங்களை சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இதில் நாட்டுப்புற கலைஞர்களின் குறைகள் குறித்து கேட்டறியப்பட்டது. தொடர்ந்து அதற்குரிய தீர்வுகள் மற்றும் அவர்களுக்கு தேவையான திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப் பட்டது.

பின்னர் புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், கலைப்பண்பாட்டு துறை இயக்குனர் கோபால கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.