பறக்கும்படையில் வாகன சோதனை நடத்திய காட்சி. 
உள்ளூர் செய்திகள்

திசையன்விளை தாலுகா பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

திசையன்விளை தாலுகா பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

திசையன்விளை:

நகர்புற உள்ளாட்சி தேர்தலை யொட்டி திசையன்விளை தாலுகா பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

நகர்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி திசையன்விளை தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் பறக்கும்படையினர் தீவிர வாகன சோதனை நடத்தினார்கள்.

வணிகவரித்துறை அதிகாரி செல்வகுமாரி தலைமையில் போலீஸ் சப் &இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் தீவிரமாக ஈடுபட்டனர்.

திசையன்விளை&இடைச்சி விளை சாலை, மன்னார்புரம் சந்திப்பு, உவரி சாலை, இட்ட மொழிசாலைகளில் சென்ற 4 சக்கரம் மற்றும் 2 சக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார்கள்.

தேர்தலையொட்டி வாகனங் களில் பரிசு பொருட்கள் மொத்தமாக கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்தனர். கட்சி கொடிகளுடன் வந்த வாகனங்களும் தீவிர சோதனை செய்யப்பட்டது.

SCROLL FOR NEXT