கல்லிடைக்குறிச்சி:
நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில், அம்பை டி.எஸ்.பி. பிரான்சிஸ் தலைமையில் பொதுமக்கள் பாதுகாப்பாக
வாக்களிக்கும் பொருட்டு கொடி அணி வகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பாகவும், நேர்மையாகவும், அமைதியாக நடைபெறவும், குற்றங்கள் நடைபெறாமல் தடுக்கவும், வன்முறை நடைபெறாமல் இருக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பாக வாக்களிக்கும் வகையில் இந்த கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.
அம்பையில் ஊர்வலம் ரகுமானியாபுரம் பகுதியில் இருந்து தொடங்கி பொத்தை சுப்பிரமணியபுரம் வழியாக கருப்பசாமி கோவிலின் முன்பு நிறைவுபெற்றது.
கல்லிடையில் ரஹ்மத் ஜும்மா பள்ளிவாசல் அருகில் இருந்து தொடங்கிய அணிவகுப்பு 6-ம் நம்பர் ரோடு சந்தன மாரியம்மன் கோவில் வழியாக சென்று அகத்தியர் கோவில் பின்புற மாக வடக்கு புதுத்தெரு சென்று திலகர் வித்யாலயா மேல்நிலைப்பள்ளி முன்பு நிறைவடைந்தது.
அணிவகுப்பில் மாவட்ட ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பிரமணியன், அம்பை அனைத்து மகளிர் இன்ஸ்பெக்டர் ராதா, அம்பை இன்ஸ்பெக்டர் சந்திரமோகன், கல்லிடைக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜகுமாரி உள்பட 100-க்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டனர்.