நாங்குநேரி:
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள வாகைகுளத்தை சேர்ந்தவர் வேல்ராஜ் (வயது 64), விவசாயி. இவர் இன்று காலை டீ குடிப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
சிறுமளஞ்சிணீ- பெருமளஞ்சி சாலையில் சென்றபோது நெல்லையில் இருந்து ராதாபுரம் அருகே நக்கனேரியில் உள்ள சாஸ்தா கோவிலுக்கு ஒரு குடும்பத்தினர் காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வேல்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவல் அறிந்த நாங்குநேரி இன்ஸ்பெக்டர் காளியப்பன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் காரை ஓட்டி வந்த நெல்லையை சேர்ந்த டிரைவர் ஆவுடையப்பன் (62) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.