நெல்லை:
கடையநல்லூர் பேட்டையை சேர்ந்தவர் அப்துல்லா. இவரது மகன் முகமது அன்சார்(வயது 20). இவர் நெல்லையில் ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இதற்காக பாளை மகாராஜநகரில் உள்ள ஸ்டேட் பாங்க் காலனியில் தனியாக அறை எடுத்து அவர் தங்கியிருந்தார். இவருடன் லேப் டெக்னீசியன் படிக்கும் 5 மாணவர்களும் தங்கி உள்ளனர்.
நேற்று இரவு அனைவரும் பேசிக்கொண்டிருந்தனர். பின்னர் ஒன்றாக சாப்பிட்டு முடித்துவிட்டு அவரவர் அறைகளில் தூங்க சென்றனர்.
இந்நிலையில் இன்று காலை வெகுநேரமாகியும் முகமது அன்சார் எழுந்திருக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சக நண்பர்கள் அவரை எழுப்பினர்.
மேலும் அவர் அருகே விஷ பாட்டிலும் இருந்துள்ளது. இதனால் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து நண்பர்கள் பாளை ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் முகமது அன்சார் உடலை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது தெரியவில்லை.
இதுகுறித்து அவரது பெற்றோருக்கு தகவல் தெரி விக்கப்பட்டுள்ளது. அவர்கள் வந்தபின்னரே தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.