பாளை மண்டல அலுவலகத்தில் ஒட்டப்பட்டுள்ள பட்டியலை பார்வையிட்டவர்களை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரம்- 42 பேர் போட்டியின்றி தேர்வு

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெல்லை:

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடக்கிறது.

நெல்லை மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 17 பேரூராட்சிகளில் மொத்தம் 397 வார்டுகளுக்கும், தூத்துக்குடி மாவட்டத்தில்  ஒரு மாநகராட்சி, 3 நகராட்சி, 18 பேரூராட்சிகளில் மொத்தம் 414 வார்டுகளுக்கும்,  தென்காசி மாவட்டத்தில் 6 நகராட்சி, 17 பேரூராட்சிகளில் மொத்தம் 440 வார்டுகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

இதற்கான வேட்புமனுத் தாக்கல் முடிந்து நேற்று இறுதி வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டது. இதில் நெல்லை மாவட்டத்தில் 17 பேரூராட்சிகளில் உள்ள 273 வார்டுகளில் 9 பேர் போட்டியின்றி தேர்வு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடம்பூர் பேரூராட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள 17 பேரூராட்சிகளில்  உள்ள 261 வார்டுகளில் 6 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

தென்காசி மாவட்டத்தில் 17 பேரூராட்சிகளில் உள்ள 260 வார்டுகளில் 27 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் மட்டும் பேரூராட்சி வார்டுகளில் மொத்தம் 42 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி வார்டு பதவிகளுக்கும், பேரூராட்சியில் உள்ள ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்படாத வார்டுகளுக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது.

இதில் நெல்லை மாவட்டத்தில் உள்ள 388 வார்டுகளுக்கு 1,790 பேர் போட்டியிடுகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 402 வார்டுகளுக்கு1,950 பேர் போட்டியிடுகிறார்கள்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 413 வார்டுகளுக்கு 1,840 பேர் போட்டியிடுகிறார்கள்.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 5,580 பேர் போட்டியிடுகிறார்கள். இதில் கட்சி வேட்பாளர்களுக்கு அந்தந்த கட்சி சின்னங்களும், சுயேட்சை வேட்பாளர்களுக்கு புதிதாக சுயேட்சை 

சின்னங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளன.

தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மட்டுமே உள்ளதால் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஒவ்வொருவரும் வீடு வீடாக சென்று தங்கள் வாக்குறுதிகளை நோட்டீசாக கொடுத்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். வேட்பாளருடன் அந்தந்த பகுதி ஆதரவாளர்கள் திரளாக சென்று ஆதரவு திரட்டுகிறார்கள்.

சுயேட்சை வேட்பாளர் களும் பலர் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சில வேட்பாளர்கள் தாரை, தப்பட்டை, கொட்டு, மேளம் அடித்து தொண்டர்களுடன் சென்று ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள்.

பிரபல கட்சி தலைவர்களும் தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்கள். நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டத்தில் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்கட்சி தலைவருமான 

எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் தி.மு.க. மகளிரணி தலைவி கனிமொழி எம்.பி. பிரசாரம் செய்து வருகிறார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் முக்கிய நகரங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை இன்று மாலை நெல்லை மாவட்டத்தில் பிரசாரம் செய்து ஓட்டு கேட்கிறார். அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ-.பன்னீர் செல்வம் விரைவில் பிரசாரம் செய்ய உள்ளார்.

இதுதவிர அமைச்சர்கள், எம்.எல்.ஏ-.க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆகியோரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ளதால், பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனைகளை அதிகரித்துள்ளார்கள். 

முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தல் நடைபெறும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதி களில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT