களக்காடு:
களக்காடு செயிண்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளியில் வருவாய்துறை மற்றும் பேரிடர் மேலாண் துறை சார்பில் பேரிடர் மீட்பு குறித்த பயிற்சி முகாம் நடந்தது.
நாங்குநேரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அதிகாரி பாபநாசம் தலைமை தாங்கினார். இதில் தீயணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டவர்களை மீட்பது, தீ விபத்தில் சிக்கியவர்களை மீட்பது பற்றி செயல் விளக்கம் அளித்தனர்.
கல்லூரி சேர்மன் தமிழ்செல்வன், முதல்வர் குமரேசன், பேரிடர் மேலாண்மை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சபேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.