நெல்லை:
நெல்லை மாவட்ட நிர்வாகம் சார்பில் புத்தக திருவிழா பாளை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தினமும் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து பார்வையிட்டு செல்கிறார்கள். தினமும் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது.
4-ம் நாளான இன்று ஞாயிற் றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலை முதலே ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ- மாணவி கள், பெற்றோர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் பார்வையிட்டனர்.
இன்று களிமண் கொண்டு பானைகள் மற்றும் பல்வேறு உருவங்கள் செய்யும் பயிற்சி வழங்கப்பட்டது. புத்தக திருவிழாவில் அமைக்கப் பட்டுள்ள 110 அரங்குகளிலும் ஏராளமான கூட்டம் இன்று காணப்பட்டது.
தமிழ்நாடு அரசு பாட நூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி இன்று புத்தக திருவிழாவை பார்வையிட்டார். தொடர்ந்து அவர் வ.உ.சி. மைதானம் உள் விளையாட்டு அரங்கில் தொல்லியல் துறை சார்ந்த கூடத்தினை பார்வையிட்டு அங்குள்ள பழங்கால பொருட் களை பார்வையிட்டார்.