கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்களுக்கு புதிய இன்ஸ்பெக்டர்கள் நியமனம்

நெல்லை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் நிலையங்களுக்கு புதிய இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நெல்லை:

நெல்லை மாநகர பகுதியில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு புதிய இன்ஸ்பெக்டர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி நெல்லை ஊரக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இன்ஸ் பெக்டராக பணியாற்றிய ராசிதா மேலப்பாளையம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டராகவும், திருச்செந்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் இந்திரா டவுன் குற்றப்பிரிவுக்கும்,

நெல்லை மாநகர கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றிவரும் டேவிட் ரவிராஜன் தச்சநல்லூர் குற்றப் பிரிவு இன்ஸ்பெக்ட ராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

குமரி மாவட்டம் அருமனை இன்ஸ்பெக்டர் ஞானராஜ் ஐகிரவுண்டு இன்ஸ்பெக்டராகவும்,  தூத்துக்குடி மாவட்ட கட்டுப் பாட்டு அறையில் பணியாற்றிய ராஜா சுந்தர் பேட்டை குற்றப்பிரிவு இன்ஸ் பெக்டராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

 தென்காசி மாவட்டம் பனவடலி சத்திரம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி பெருமாள்புரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராகவும், குருவிகுளம் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு சிறப்பு நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டராகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கான உத்தரவை மாநகர போலீஸ் கமிஷனர் துரைகுமார் பிறப்பித்துள்ளார்.

SCROLL FOR NEXT