கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

தச்சுத்தொழிலாளி விஷம் குடித்து சாவு

வள்ளியூர் அருகே தச்சுத்தொழிலாளி விஷம் குடித்து இறந்தார்.

நெல்லை:

வள்ளியூர் அருகே உள்ள சாலைகுளம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 33). இவர் தச்சு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

தினசரி வீட்டிற்கு மது குடித்து வந்ததால், உறவினர்கள் கண்டித்தனர். இதில் மனமுடைந்த சுரேஷ் குமார் கடந்த 25&ந்தேதி விஷம் குடித்து உயிருக்கு போராடினார்.

அவரை மீட்டு வள்ளியூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

SCROLL FOR NEXT