கோப்புப்படம் 
உள்ளூர் செய்திகள்

மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

நெல்லை அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.

நெல்லை:

மானூர் அருகே உள்ள தெற்குபட்டி செக்கடி தெருவை சேர்ந்தவர் சங்கிலி பூதத்தான் (வயது21). இவர் மடத்தூரில் உள்ள ஒரு செங்கல் சூளையில் வேலை  பார்த்து வந்தார்.

இன்று காலை அவர் செங்கல் அறுவை எந்திரத்தில் வேலை செய்து கொண்டி ருந்தார். அப்போது அவரை எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.

உடனடி யாக அவரை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.